வாழ்க்கை அதன் பாதையில் சென்றது!!! பெங்களூரு வந்து நான்கு ஆண்டுகள் மின்னலென நகர்ந்தது!!!
புகழ் பெற்ற நெட்வொர்கிங் கம்பெனியில் எனது பணி தொடர்ந்தது!!! யாரும் செய்ய துணியாத தவறை நான் செய்தேன்!! ஆம்!!! எனது மேலாளரை எதிர்த்து பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது!!!! எதிர்த்து பேசினேன் பணி சம்மதமாக!!!!
கட்டம் கட்ட பெற்றேன் சொந்த அணியில்!!! நான் எது செய்தலும் குற்றம்!!! நான் எனது பணியை செய்தால் குற்றம்!!! எந்த கருத்தை கூறினாலும் குற்றம்!!!
நான் செய்த பணியின் பலன்கள் மற்றவர்க்கு சென்றது!!! காலத்தின் கட்டாயத்தால் மௌனம் காத்தேன்!!!
வேண்டாத மருமகளின் கை பட்டால் குற்றம் !!! எனக்கு உண்மை ஆனது!!!
நான் எது செய்தலும் குற்றம்!!! சிறப்பாக பணி செய்ததன் பலன் கிடைத்தது!!! ஆம்!!!! மோசமாக பணி செய்பவன் என்னும் பெயர் எனக்கு கிடைத்தது!!!! அவ்வாறு சொல்லப்பட்டது மேலாளரால்!!!!
நான் எனது சொந்த நம்பிக்கையை இழக்க ஆரம்பித்தேன் கொஞ்சம் கொஞ்சமாக!!!
எனது இரவுகள் மேக்டோவேல் & நெப்போலியனால் நிரப்ப பெற்றது!!!
எனது அலுவலக நேரம் மாறி போனது!!! முதல் ஆளாக பணிக்கு வரும் நான் கடைசி ஆளாக பணிக்கு வந்தேன்!!!
எனது வாழ்வின் மற்றும் இரு நண்பர்கள் எனக்கு அறிமுகம் ஆயினர்!!!!
ஒருவர் எனது ப்ராஜெக்ட் மேலாளராக மற்றும் ஒருவர் எனது நல்ல தோழியாக!!!
புகை பிடிக்கும் பழக்கம் இல்லாத நன் புகைக்க தொடங்கினேன்!!
ஒரு மேசமான குற்றச்சாட்டு என் மீது சுமத்த பெற்றது!!!! எதற்கும் கலங்கா என்னையும் கலக்கியது அது!!!
எனது நிலையை எடுத்து கூறினேன்!!! எவரும் ஏற்க்க மறுத்தனர்!!! மறுக்க வைக்க பட்டனர்!!!
அனைவரும் ஆவலோடு பார்க்கும் திறமை அடிப்படையிலான மதிப்பேடு தொடங்கியது!!!
எனது மதிப்பீடு என்னை புரட்டி போட்டது!!! ஆம் !!! எனது வாழ்வில் நான் பெற்ற மிகவும் கேவலமான மதிப்பீடு அது!!!!
கிடைக்க வேண்டிய அனைத்தும் மறுக்க பெற்றது!!!!
நான் என்னை மீண்டும் நிருபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானேன்!!!
எனது பணியை சற்றே முழு முச்சுடன் செய்தேன்!!! நாள் மறேந்தேன்!!! மணி மறேந்தேன்!!! கவனம் முழுவதும் பணியில் சென்றது !!! என்னை நன்கு அறிந்த எனது நண்பர் ஒருவர் எனக்கு மேலாளராக வந்தார்!!!
எனது அணைத்து சலுகைகளையும் இழந்த எனக்கு ஒரு நன்மை கிடைத்தது!!! ஆம் எனது வாழ்வின் மற்றும் ஒரு பந்தம் இந்த நாளில் எனக்கு தெரிய தொடங்கியது!!!
எப்போதோ நான் எடுக்க வேண்டிய முடிவினை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளக்காபட்டேன்!!! அணியை மாற்ற முடிவு செய்தேன்!!!
அணியை மாற்றினேன்!!! அறிந்த சிலர் அதிர்ந்தனர்!!! சிலர் ஆச்சர்யப்பட்டனர்!!!
அப்போது தான் உணர்த்தேன் எதையோ நான் இழப்பதாக!!!
அது!!!
Sunday, April 3, 2011
Subscribe to:
Posts (Atom)