Tuesday, July 14, 2009

ஆடு தண்டு காவேரி பயணம்

நீண்ட நாட்களுக்கு பிறகு எனது நண்பன் என்னை பார்க்க பெங்களூர் வந்தான்... எங்களின் வழக்கமான பயணம் தொடங்கியது..

நடு இரவில் ( காலை ஏழு மணி) எழுந்த நான் அவனை வரவேற்க சென்றேன்...
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு என்னை பார்த்த அவன் பிரமித்தான் என் உருவத்தால்...

எங்களது காலை பயணம் தொடங்கியது ஹோட்டல் தேடி.. கோரமங்களாவில் ஒரு ஹோட்டல்-ஐ கண்டு அங்கே சென்றேம்...

எங்களது மெனு பார்த்த ஹோட்டல் உரிமையாளர் சிறப்பு மரியாதையை கொடுத்தார்.. இட்லி.. பொங்கல்.. மசாலா தோசை.. இடியப்பம்.. தோசை.. பூரி என ஒவ்வொருவரும் சாப்பிட மொத்த ஹோட்டல்-உம் எங்களை வேடிக்கை பார்க்க எங்களின் சிற்றுண்டி முடிந்தது...

பிறகு எங்களின் பயணம் போரம் நோக்கி தொடங்கியது... இரண்டு மணி நேர நடை பயணத்திற்கு பிறகு போரம் சென்றோம்....

கண்களுக்கு நல்ல விருந்து கிடைத்தது .... எங்கள் மீது எங்கள் நம்பிக்கையும் குறைந்தது.. வாழ்விஇன் நாட்களை வேஸ்ட் செய்து விட்டோம் என்று...

கண்களுக்கு கிடைத்த விருந்தினால் வயிற்றை மறந்த நாங்கள் பிற்பகல் இரண்டு மணிக்கு மேல் மத்திய உணவினை பற்றி எண்ணினோம்....

இரவு முழுக்க இனிமையாக முடிய.....


நடு இரவில் ( காலை ஏழு மணி) எழுந்து ஆடு தண்டு காவேரி பயணம் தொடங்கியது

Sunday, April 19, 2009

காதலியும் கல்லூரி தேர்தலும்

கல்லூரி தேர்தல் தொடங்கியது....
அனைத்து துறைகளிலும் தேர்தல் தேரோட்டம் தொடங்கியது......

உன்னை கவர நான் தேர்தலில் போட்டியிட நினைத்தேன்.....
ஆனால் நண்பன் தேர்தலில் அவன் போட்டியிட மனு தாக்கல் செய்தான் எனக்கு தெரியாமல்...
எங்கள் அணி அவனுக்காக தேர்தல் பனி செய்தோம்....
உன்னிடம் பேச ஒரு வாய்ப்பு பெற்றேன்...
இம்முறையும் தோல்விதான் எனக்கு....
நன்கு படிக்கும் மாற்று அணிக்கு மாணவிகளின் ஓட்டு..
பேராசிரியை உதவியுடன் எதிரணி வெற்றி கொண்டது...
எங்கள் அணி டெபொசிட் இழந்தது...
தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என வெறுமையாய் கூறினோம்...

தேர்தல் ஆய்வு என் அறையில் நெப்போலியன் முன்னிலையில் மெக்டொவெல் தலைமையில் தொடங்கியது.....
ஜனநாயகத்தில் வெற்றி கொள்ள முடியாது என புரிந்தது....

வெற்றி பெற்ற மாணவனை நண்பர்கள் ம்ச்டோவேல் உடன் சென்று மிரட்டி வாபஸ் பெற செய்தேன்... அவன் உனது நண்பன் என தெரியாமல்...
மேலும் உன்னிடம் வெறுப்பை சம்பாதித்தேன்...

துறையின் அனைத்து பொறுப்புகளுக்கும் மாணவர்கள் நியமிக்கபட்டனர்.....

நான் நமது துறையின் செயலாளர் பொறுப்பிற்கு நியமிக்கபட்டேன்.....
அச்சர்யம் ஆனால் உண்மை!!!!!...
நன்கு படிக்கும் மாணவர்கள் இருக்க நானா அந்த பதவிக்கு???
நண்பர்களின் உதவியால் நடந்தது இது??? ஒல்லி குச்சி நரசிம்மனுக்கு தம்பி உருவமுடைய எனது நண்பன் எனக்காக பேசியதால்..
ஆம் .. நான் கேட்ட பதவி கிடைத்தது....
ஆனால் நன்கு படிக்கும் மாணவர்களின் வெறுப்பும் கிடைத்தது.....

கல்லூரி பதவி வகுப்புகளின் வருகை பதிவேட்டை மாற்ற உதவியது...... நீ கல்லூரிக்கு வராத நாட்களில் உனக்காக வருகை பதிவேட்டை மாற்றினேன்...

நாட்கள் சென்றது....
நானும் கல்லூரிக்கு சென்று வந்தேன்... உன்னை பார்ப்பதை மட்டும் நிறுத்த முடியாமல்... நீ வராத கல்லூரியின் லைப்ரரி-இல் எனது பொழுதுகள் சென்றது...
கல்கியும் சாண்டில்யனும் எனக்கு பழகினர்... நானும் முதன்முதலா காவியங்களை படிக்க தொடங்கினேன்...

சாண்டில்யனின் படைப்புகளில் உன்னை தான் என்னால் பார்க்க முடிந்தது......
"அந்த நாட்களில் என்னால் உனக்கு பிடிக்காத எதையும் செய்ய முடியவில்லை .. உன்னை காதலிப்பதை தவிர"...


வெகு சிலர்க்கு மட்டுமே தெரிந்த எனது காதல் கல்லூரி முழுக்க உன்னால் தெரிந்தது... எனது காதலை வேடிக்கையாய் அனைவரிடமும் சொன்ன உன்னால் அனைவரும் என்னை வேடிக்கையாய் பார்த்தனர்...
நான் ஒரு சிரிப்பு மாணவன் ஆனேன்...

உனது அக்காவின் திருமணம் நிச்சியக்கப்பட்டது... வகுப்பில் இருந்த அனைவரையும் நேரில் அழைத்த நீ என்னை மட்டும் மறந்தாய்....
மீண்டும் ஒரு முறை நான் தோற்றேன் இதனால்...

ஆறாவது செமஸ்டர் தேர்வுகள் தொடங்கியது..... எனது தோழியின் வற்புறுத்தலால் நானும் இம்முறை கொஞ்சம் படித்தது உதவியது...

எனது தந்தை ஓய்வு பெற்றார்....
வாழ்க்கை பயம் முதன்முதலாக எனக்கு வந்தது...

Tuesday, March 31, 2009

என் கல்லூரியும் காதலியும்!!!

என் கல்லூரியும் காதலியும்

பள்ளியில் நன்றாக படித்து, கல்லூரியில் சேர்த்தவுடன் கண்டேன் என் கனவு தேவதையை. கஷ்டபட்டு நல்லவன் போல நடிக்கவேண்டியதாகிவிட்டது அவளிடம்.... முதல் வருடம் முழுக்க அவளின் நினைவுகளோடு பாடத்தையும் படித்தேன்..

அந்த நாட்கள் என் வாழ்வின் இனிய நாட்கள்........
நாள் மறந்து மாதம் மறந்து வாழ்ந்த நாட்கள்....
காலையில் எழுந்து என் காதலியை பார்க்க கல்லூரி சென்ற நாட்கள்...
முதன்முதலில் நானும் கனவானை போல உடுத்திய நாட்கள்..
பாடத்தை மறந்து அந்த பாவையின் முகத்தை பார்த்து கொண்டு இருந்த நாட்கள்..
நண்பனின் பிறந்த நாளை மறந்து காதலியின் பிறந்த நாளை தினமும் நினைத்த நாட்கள்..
தமக்கையின் வெளிநாட்டு பயணத்தை மறந்து காதலியின் பிறந்த நாளை மட்டுமே நினைவில் வைத்த நாட்கள்..
முதல் ஆண்டு முழுக்க கடவுளை வேண்டும் முனிவனை போல காதலியை வேண்டிய எனது நாட்கள்...
தேர்வு வந்தது... பாடத்தை நினைத்து பார்க்க முயன்று காதலியின் முகத்தினை மட்டும் நினைக்க முடிந்தநாட்கள்.....

பிறகு தான்.. நான் உணர்தேன் நான் முதலாம் ஆண்டு படித்தது பாடம் அல்ல... எனது காதலியை என்று...... எழுதினேன் எனது காதலியை பற்றி தேர்வினில்..
வழக்கம் போல....

முதலாம் அண்டு விடுமுறை நாட்கள் தான் எத்தனை கொடுமை......
இரண்டாம் ஆண்டில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு நுழைந்தேன்.......

தேர்வு முடிவுகள் வந்தது... எனது முதல் தோல்வி தெரிந்தது... தோல்வி எனது தேர்வில் மட்டும் அல்ல எனது காதலிலும் என்று பிறகு புரிந்தது..

எனது தேர்வு முடிவுகள் எனது கல்லூரி வாழக்கையை முடிக்கும் அளவு வந்தது...
வங்கியில் கல்வி கடன் பெற எனது மதிப்பெண்கள் போதவில்லை...
நீதிமன்றத்தில் நிற்கும் குற்றவாளியை போல..
எனக்காக எனது தந்தையும் நின்றார் வங்கியின் மேலாளர் முன்...

ஜாமீன் பெரும் குற்றவாளியை போல மேலும் ஒரு செமஸ்டர் ஜாமீன் பெற்றேன்....

நன்றாக படிக்க வேண்டுமென்ற தந்தையின் வேண்டுகோளுடன்.... அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற வங்கி மேலாளரின் உத்தரவுடன்... தொடங்கினான் எனது கல்லூரியின் முன்றாம் செமஸ்டர் வாழ்க்கையை...

பாடத்தை கவனிக்க முயன்று மீண்டும் மீண்டும் தோற்றேன்...
நினைவுகள் எங்கோ இருக்க... கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் -உம் மைக்ரோ ப்ரோசெச்சொர்-um மழை நேர மேகமாய் மறைந்து போனது எனது நினைவில் இருந்து...
எங்கும் எதிலும் என்னவளின் நினைவுகளே........

கல்லூரியில் ஒவ்வொரு வகுப்பிற்கும் காத்திருக்க ஆரம்பித்தேன்..

பாடத்தை கவனிக்க மட்டும் அல்ல..
ஒவ்வொரு முறையும் உனது பெயரை பேராசிரியர்கள் உச்சரிக்கவும் நீ உன் இருப்பை உறுதிப்படுத்தும் உனது குரலை கேட்கவும்....

உன்னால் வகுப்பில் இருந்த நான் உன்னால் படிக்க முடியாமல் உன்னை மட்டுமே பார்க்க தொடங்கினேன்......

உனது பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் என்னில் தெரிந்த மாற்றங்களை எனது நண்பர்கள் உணர்ந்தனர்........

நண்பர்களின் கேலி தொடங்கியது.... உன்னால் என்னையும் எனது குடும்பத்தையும் நன்கு அறிந்த எனது நண்பன் எதிரியாக மாறினான் எனக்கு...
உன்னை மறக்க சொல்லி......

எனது மற்ற நண்பர்களும் எனக்கு எதிரியாகினர் உன்னை மறக்க சொல்லி..

மூன்று மாதம் கடந்தது.... எனது நிலையை கண்டு எனது நண்பர்கள் எனக்க உதவ முற்பட்டனர்...

காதலர் தினதை எதிர்பார்த்து காத்திருக்க முடியவில்லை என்னால்......

என் நிலை கண்டு என்னிடம் கேட்டாள்.. ஏன் என்று?

நீ தான் என்று சொல்ல முடியாமல்.... எனது காதலியால் என்றேன்.....

மற்றொரு நாள் நீ தான் அந்த காதலி என்ற என்னை மௌனமாய் நீ நோக்கி
விளையாடாதே செல்வா என்றாய்.....
இது விளையாட்டு அல்ல என் வாழ்க்கை என்பதை மறந்து....

இது என் வாழ்க்கை என்று நான் சொன்ன போது iந்த விளையாட்டிற்கு உனது குடும்பம் ஒத்து கொள்ளாது என்றாய்.....

பள்ளி மாணவனிடம் அறிவுரை சொல்கின்ற ஆசிரியரை போல எனக்கு அறிவுரை சொன்னாய்... என்னை படிக்க சொல்லி...
நான் வழக்கமான மாணவன் ஆனேன் அறிவுரையை ஏற்காமல்...

மறுநாள் என்னிடம் உன் முடிவை சொல் என்றேன்....

அந்த நாள் என் வாழ்வின் மறக்க முடியாத நாள்.. என் தேவதையிடம் நான் நானாக நின்று பேசிய நாள்...

மறு நாள் உனக்கும் எனக்குமான தோழியின் மூலம் என்னை நீ அழைத்த பொது இந்த உலகை வெற்றி கொண்ட(?) வீரனை போல உன்னை பார்க்க வந்தேன்..

அன்று நீ பேசிய வார்த்தைகள் என் இதயத்தை கிழித்தது....

அது நீ என்னிடம் இனிமேல் பேசாதே செல்வா என்று...
அந்த நொடி பொழுது தான் நான் என் வாழ்கையில் முதன்முறையாக தோற்றேன்...

பெற்ற தந்தை, உற்ற நண்பர்கள் உன்னிடம் பேச வேண்டாமென சொன்னதை கேட்க மறுத்த நான்.. நீ சொன்னதை கேட்டேன்...
இல்லை கேட்கும் நிலைக்கு உன்னால் தள்ளப்பட்டேன்....
அது நீ என்னிடம் முதன் முதலாக கேட்டது......


முன்றாம் செமஸ்டர் தேர்வின் அறிவிப்பு வந்தது...
நன்கு படித்த எனது நண்பர்களே தேர்வை நினைத்து கலங்கினர்....
பாடங்களின் பெயர்களை மட்டுமே அறிந்த நான்...
உன்னை மறக்க நினைத்து என்னை மறக்கடிக்கும் முயற்சியில் இறங்கினேன்...
முதலாம் ஆண்டில் விளையாட்டாய் நான் கற்ற குடி பழக்கம் என்னை முழுதாக குடித்தது...

தினமும் குடித்தேன்... படிக்காமலே பட்டம் பெற்றேன் கல்லூரியில்..
பெரிய குடிகாரன் என்று...

தேர்வுகள் தொடங்கியது.. எனது அறை தோழன் என்னை படிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டான்... குடிக்க யாரும் கம்பெனி இல்லாத நாளில் எனது
தோழனின் முயற்சி சிறிது பலித்தது...

உன்னோடைய முடிவிற்கு காரணம்.... உன் தோழி உன்னிடம் சொன்ன என்னுடைய தோற்றமும்...பொருளாதார நிலையும்.. என்னுடைய முதலாம் ஆண்டு படிப்பும், என் மதமும் தான் காரணம் என பின்பு தான் உன் உயிர் தோழி முலம் அறிந்தேன்... அது வரை என் பொருளாதார நிலை கண்டு கலங்காத நான்
முதன்முறையாக கலங்கினேன்....

பின்பு தன் நான் அறிந்தேன் என் குடும்பத்தின் நிஜ நிலையை...

தேர்வுகளை எழுதினேன் வழக்கம் போல.... ஆம் நானும் அதிர்ஷ்டசாலி தான் அனைத்து தேர்விலும் தேறினேன் வாழ்கையில் தோற்று...

முன்றாம் செமஸ்டர் மதிப்பெண் முதலாம் ஆண்டை விட மோசமாக அமைய...
இம்முறை எனது அண்ணன் எனக்காக ஜாமீன் சொன்னான் வங்கியில்...

நான்காம் செமஸ்டர் நலமுடன் தொடங்கியது...
உனக்கு ஒரு தோழன்? உன் எதிர்பார்ப்பின் படி கிடைத்தான்... எனக்கு குடிகாரன் என்ற பட்டம் கிடைத்தது...

முதன் முறையாக பாடத்தை கவனிக்க தொடங்கினேன்...
புரியாத பாடமும்.. பகட்டான ஆங்கிலமும்.. பாசமான நண்பர்களால் புரிந்து கொள்ள முடிந்தது...

முதன் முதலில் கல்லூரி நூலகத்தை நோக்கி நான் நடந்தேன்....
மொழிமாற்றி உதவியுடன் பாடங்களை புரிந்து கொள்ள முயற்சித்தேன்...

என்னை நன்கு அறிந்த உன் தோழி எனது தோழி ஆனாள்....
என் வாழ்க்கையின் இனிய மற்றுமொரு தோழி எனது வகுப்பில் எனக்கு கிடைத்தாள்...

என்னை எனது குறைகளுடன் ஏற்று கொண்டனர் எனது அறை நண்பர்கள்....

தினமும் தனது உணவை எனக்கு கொடுக்கும் எனது நண்பன் முலமாக
என்னை மற்றுமொரு பிள்ளையாக பார்க்கும் பெற்றோர்கள் கிடைத்தனர் திருச்சியில்....

பட்டதாரிக்கு வேலை வந்தது.. மருத்துவமனையில் நோயாளியாக....

குடியின் தாக்கம் வயிற்று வலியாக வந்தது....
நண்பனின் பெற்றோர் நலமுடன் பார்த்து கொண்டனர்.....

நோயின் தாக்கம் குறைய மாதம் ஒன்று குறைந்தது ஆண்டில்....
உன் மதத்தில் ஒரு மாதாவை கண்டேன் அந்த அன்னையின் வடிவில்....
எனது சிறந்த நண்பர் ஆனார் எனது நண்பனின் தந்தை....

தேறி வந்த என்னை மீண்டும் தாக்கியது காதல் நோய் உன் வடிவில்....
மருத்துவர்களாக மாறினார் நெப்போலியனும் மேக்க்டோவ்ளும்..

மருத்துவமனயில் இருந்த நாட்கள் பாடத்தை படிக்க உதவியது....
தேர்வுகள் தொடங்கியது... மீண்டும் பள்ளி மாணவனாக எழுதினேன் தேர்வை....
முடிவுகள் தெரிந்தது... நானும் நல்ல மதிப்பெண்களை பெற்றேன்..
ஆச்சரியம் ஆனால் உண்மை....

என்னையும் முதன்முதலாக சக மாணவனாக பார்த்தனர் எனது வகுப்பில்....

மீண்டும் தொடங்கியது பிரச்சனை கல்லூரி தேர்தல் முலமாக.....