என் கல்லூரியும் காதலியும்
பள்ளியில் நன்றாக படித்து, கல்லூரியில் சேர்த்தவுடன் கண்டேன் என் கனவு தேவதையை. கஷ்டபட்டு நல்லவன் போல நடிக்கவேண்டியதாகிவிட்டது அவளிடம்.... முதல் வருடம் முழுக்க அவளின் நினைவுகளோடு பாடத்தையும் படித்தேன்..
அந்த நாட்கள் என் வாழ்வின் இனிய நாட்கள்........
நாள் மறந்து மாதம் மறந்து வாழ்ந்த நாட்கள்....
காலையில் எழுந்து என் காதலியை பார்க்க கல்லூரி சென்ற நாட்கள்...
முதன்முதலில் நானும் கனவானை போல உடுத்திய நாட்கள்..
பாடத்தை மறந்து அந்த பாவையின் முகத்தை பார்த்து கொண்டு இருந்த நாட்கள்..
நண்பனின் பிறந்த நாளை மறந்து காதலியின் பிறந்த நாளை தினமும் நினைத்த நாட்கள்..
தமக்கையின் வெளிநாட்டு பயணத்தை மறந்து காதலியின் பிறந்த நாளை மட்டுமே நினைவில் வைத்த நாட்கள்..
முதல் ஆண்டு முழுக்க கடவுளை வேண்டும் முனிவனை போல காதலியை வேண்டிய எனது நாட்கள்...
தேர்வு வந்தது... பாடத்தை நினைத்து பார்க்க முயன்று காதலியின் முகத்தினை மட்டும் நினைக்க முடிந்தநாட்கள்.....
பிறகு தான்.. நான் உணர்தேன் நான் முதலாம் ஆண்டு படித்தது பாடம் அல்ல... எனது காதலியை என்று...... எழுதினேன் எனது காதலியை பற்றி தேர்வினில்..
வழக்கம் போல....
முதலாம் அண்டு விடுமுறை நாட்கள் தான் எத்தனை கொடுமை......
இரண்டாம் ஆண்டில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு நுழைந்தேன்.......
தேர்வு முடிவுகள் வந்தது... எனது முதல் தோல்வி தெரிந்தது... தோல்வி எனது தேர்வில் மட்டும் அல்ல எனது காதலிலும் என்று பிறகு புரிந்தது..
எனது தேர்வு முடிவுகள் எனது கல்லூரி வாழக்கையை முடிக்கும் அளவு வந்தது...
வங்கியில் கல்வி கடன் பெற எனது மதிப்பெண்கள் போதவில்லை...
நீதிமன்றத்தில் நிற்கும் குற்றவாளியை போல..
எனக்காக எனது தந்தையும் நின்றார் வங்கியின் மேலாளர் முன்...
ஜாமீன் பெரும் குற்றவாளியை போல மேலும் ஒரு செமஸ்டர் ஜாமீன் பெற்றேன்....
நன்றாக படிக்க வேண்டுமென்ற தந்தையின் வேண்டுகோளுடன்.... அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற வங்கி மேலாளரின் உத்தரவுடன்... தொடங்கினான் எனது கல்லூரியின் முன்றாம் செமஸ்டர் வாழ்க்கையை...
பாடத்தை கவனிக்க முயன்று மீண்டும் மீண்டும் தோற்றேன்...
நினைவுகள் எங்கோ இருக்க... கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் -உம் மைக்ரோ ப்ரோசெச்சொர்-um மழை நேர மேகமாய் மறைந்து போனது எனது நினைவில் இருந்து...
எங்கும் எதிலும் என்னவளின் நினைவுகளே........
கல்லூரியில் ஒவ்வொரு வகுப்பிற்கும் காத்திருக்க ஆரம்பித்தேன்..
பாடத்தை கவனிக்க மட்டும் அல்ல..
ஒவ்வொரு முறையும் உனது பெயரை பேராசிரியர்கள் உச்சரிக்கவும் நீ உன் இருப்பை உறுதிப்படுத்தும் உனது குரலை கேட்கவும்....
உன்னால் வகுப்பில் இருந்த நான் உன்னால் படிக்க முடியாமல் உன்னை மட்டுமே பார்க்க தொடங்கினேன்......
உனது பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் என்னில் தெரிந்த மாற்றங்களை எனது நண்பர்கள் உணர்ந்தனர்........
நண்பர்களின் கேலி தொடங்கியது.... உன்னால் என்னையும் எனது குடும்பத்தையும் நன்கு அறிந்த எனது நண்பன் எதிரியாக மாறினான் எனக்கு...
உன்னை மறக்க சொல்லி......
எனது மற்ற நண்பர்களும் எனக்கு எதிரியாகினர் உன்னை மறக்க சொல்லி..
மூன்று மாதம் கடந்தது.... எனது நிலையை கண்டு எனது நண்பர்கள் எனக்க உதவ முற்பட்டனர்...
காதலர் தினதை எதிர்பார்த்து காத்திருக்க முடியவில்லை என்னால்......
என் நிலை கண்டு என்னிடம் கேட்டாள்.. ஏன் என்று?
நீ தான் என்று சொல்ல முடியாமல்.... எனது காதலியால் என்றேன்.....
மற்றொரு நாள் நீ தான் அந்த காதலி என்ற என்னை மௌனமாய் நீ நோக்கி
விளையாடாதே செல்வா என்றாய்.....
இது விளையாட்டு அல்ல என் வாழ்க்கை என்பதை மறந்து....
இது என் வாழ்க்கை என்று நான் சொன்ன போது iந்த விளையாட்டிற்கு உனது குடும்பம் ஒத்து கொள்ளாது என்றாய்.....
பள்ளி மாணவனிடம் அறிவுரை சொல்கின்ற ஆசிரியரை போல எனக்கு அறிவுரை சொன்னாய்... என்னை படிக்க சொல்லி...
நான் வழக்கமான மாணவன் ஆனேன் அறிவுரையை ஏற்காமல்...
மறுநாள் என்னிடம் உன் முடிவை சொல் என்றேன்....
அந்த நாள் என் வாழ்வின் மறக்க முடியாத நாள்.. என் தேவதையிடம் நான் நானாக நின்று பேசிய நாள்...
மறு நாள் உனக்கும் எனக்குமான தோழியின் மூலம் என்னை நீ அழைத்த பொது இந்த உலகை வெற்றி கொண்ட(?) வீரனை போல உன்னை பார்க்க வந்தேன்..
அன்று நீ பேசிய வார்த்தைகள் என் இதயத்தை கிழித்தது....
அது நீ என்னிடம் இனிமேல் பேசாதே செல்வா என்று...
அந்த நொடி பொழுது தான் நான் என் வாழ்கையில் முதன்முறையாக தோற்றேன்...
பெற்ற தந்தை, உற்ற நண்பர்கள் உன்னிடம் பேச வேண்டாமென சொன்னதை கேட்க மறுத்த நான்.. நீ சொன்னதை கேட்டேன்...
இல்லை கேட்கும் நிலைக்கு உன்னால் தள்ளப்பட்டேன்....
அது நீ என்னிடம் முதன் முதலாக கேட்டது......
முன்றாம் செமஸ்டர் தேர்வின் அறிவிப்பு வந்தது...
நன்கு படித்த எனது நண்பர்களே தேர்வை நினைத்து கலங்கினர்....
பாடங்களின் பெயர்களை மட்டுமே அறிந்த நான்...
உன்னை மறக்க நினைத்து என்னை மறக்கடிக்கும் முயற்சியில் இறங்கினேன்...
முதலாம் ஆண்டில் விளையாட்டாய் நான் கற்ற குடி பழக்கம் என்னை முழுதாக குடித்தது...
தினமும் குடித்தேன்... படிக்காமலே பட்டம் பெற்றேன் கல்லூரியில்..
பெரிய குடிகாரன் என்று...
தேர்வுகள் தொடங்கியது.. எனது அறை தோழன் என்னை படிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டான்... குடிக்க யாரும் கம்பெனி இல்லாத நாளில் எனது
தோழனின் முயற்சி சிறிது பலித்தது...
உன்னோடைய முடிவிற்கு காரணம்.... உன் தோழி உன்னிடம் சொன்ன என்னுடைய தோற்றமும்...பொருளாதார நிலையும்.. என்னுடைய முதலாம் ஆண்டு படிப்பும், என் மதமும் தான் காரணம் என பின்பு தான் உன் உயிர் தோழி முலம் அறிந்தேன்... அது வரை என் பொருளாதார நிலை கண்டு கலங்காத நான்
முதன்முறையாக கலங்கினேன்....
பின்பு தன் நான் அறிந்தேன் என் குடும்பத்தின் நிஜ நிலையை...
தேர்வுகளை எழுதினேன் வழக்கம் போல.... ஆம் நானும் அதிர்ஷ்டசாலி தான் அனைத்து தேர்விலும் தேறினேன் வாழ்கையில் தோற்று...
முன்றாம் செமஸ்டர் மதிப்பெண் முதலாம் ஆண்டை விட மோசமாக அமைய...
இம்முறை எனது அண்ணன் எனக்காக ஜாமீன் சொன்னான் வங்கியில்...
நான்காம் செமஸ்டர் நலமுடன் தொடங்கியது...
உனக்கு ஒரு தோழன்? உன் எதிர்பார்ப்பின் படி கிடைத்தான்... எனக்கு குடிகாரன் என்ற பட்டம் கிடைத்தது...
முதன் முறையாக பாடத்தை கவனிக்க தொடங்கினேன்...
புரியாத பாடமும்.. பகட்டான ஆங்கிலமும்.. பாசமான நண்பர்களால் புரிந்து கொள்ள முடிந்தது...
முதன் முதலில் கல்லூரி நூலகத்தை நோக்கி நான் நடந்தேன்....
மொழிமாற்றி உதவியுடன் பாடங்களை புரிந்து கொள்ள முயற்சித்தேன்...
என்னை நன்கு அறிந்த உன் தோழி எனது தோழி ஆனாள்....
என் வாழ்க்கையின் இனிய மற்றுமொரு தோழி எனது வகுப்பில் எனக்கு கிடைத்தாள்...
என்னை எனது குறைகளுடன் ஏற்று கொண்டனர் எனது அறை நண்பர்கள்....
தினமும் தனது உணவை எனக்கு கொடுக்கும் எனது நண்பன் முலமாக
என்னை மற்றுமொரு பிள்ளையாக பார்க்கும் பெற்றோர்கள் கிடைத்தனர் திருச்சியில்....
பட்டதாரிக்கு வேலை வந்தது.. மருத்துவமனையில் நோயாளியாக....
குடியின் தாக்கம் வயிற்று வலியாக வந்தது....
நண்பனின் பெற்றோர் நலமுடன் பார்த்து கொண்டனர்.....
நோயின் தாக்கம் குறைய மாதம் ஒன்று குறைந்தது ஆண்டில்....
உன் மதத்தில் ஒரு மாதாவை கண்டேன் அந்த அன்னையின் வடிவில்....
எனது சிறந்த நண்பர் ஆனார் எனது நண்பனின் தந்தை....
தேறி வந்த என்னை மீண்டும் தாக்கியது காதல் நோய் உன் வடிவில்....
மருத்துவர்களாக மாறினார் நெப்போலியனும் மேக்க்டோவ்ளும்..
மருத்துவமனயில் இருந்த நாட்கள் பாடத்தை படிக்க உதவியது....
தேர்வுகள் தொடங்கியது... மீண்டும் பள்ளி மாணவனாக எழுதினேன் தேர்வை....
முடிவுகள் தெரிந்தது... நானும் நல்ல மதிப்பெண்களை பெற்றேன்..
ஆச்சரியம் ஆனால் உண்மை....
என்னையும் முதன்முதலாக சக மாணவனாக பார்த்தனர் எனது வகுப்பில்....
மீண்டும் தொடங்கியது பிரச்சனை கல்லூரி தேர்தல் முலமாக.....
"மருத்துவர்களாக மாறினார் நெப்போலியனும் மேக்க்டோவ்ளும்" I like this line :)
ReplyDeleteIts true too...
ReplyDelete