Tuesday, March 30, 2010

புதிய அனுபவம்

ஒவ்வொரு காலத்திலும் மாற்றம் வரும்!!!
எனது வாழ்விலும் ஒரு இனிய மாற்றம் சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு!!!!

சென்னையில் இருந்து பெங்களூர் சென்றேன் புதிய பணிக்காக!!!!
புதிய கம்பெனியில் சேர்ந்த போது என்னுடன் சென்னையில் பணி புரிந்த நண்பனும் சேர்த்தான்!!

என் கல்லூரி நண்பர்களின் வீட்டில் தஞ்சம் அடைந்தேன்!!!
ஒவ்வொரு நாளும் கல்லூரி நினைவுகளை அசைப்போட இனிமையாய்
சென்றது!!
கல்லூரி நினைவுகள் சோகத்தின் சுகமாய் என்னை கொன்றது!!!

பிறகு
எனது அணியில் புதியதாக ஒரு பெண் சேர்ந்தாள்!!!!!
ஆளை அடிக்கும் அழகில்லை!!! அசத்தலான அமைப்பும் இல்லை!!!


பணியின் காரணமாய் எனது ஸ்கிரிப்ட் அவளிடம் ரெவியுகு சென்றது!!!
அதிசயம் அனால் உண்மை!! செய்முறையில் எந்த தவறும் இல்லாத ஸ்கிரிப்ட்!!
முதல் பாராட்டு அவளிடம் இருந்து!!!

நாட்கள் நகர்ந்தது!!!
உடன் பணி புரியும் பெண்ணின் திருமணத்திற்கு என் கல்லூரி தோழனின் சொந்த ஊருக்கு சென்றோம்!!!

அவளுடன் எனது முதல் பயணம்!!!
மறுநாள் அவளை கண்ட நான் ஒரு கணம் என்னை மறந்தேன்!!!
மேக்கப்-இன் மகிமையை உணர்தேன்!!!
தேவதையின் மறு உருவாய் திகைக்க வைத்தாள்!!


பத்து ஆண்டுகளுக்கு பிறகு என்னில் எதோ மாற்றம்!!
கல்லூரி காதலிக்கு பிறகு என்னை கவர்ந்தாள்!!!

பணியில் ஏற்பட்ட சிறு மாற்றத்தினால் அவளுடன் முழு நேரமும் எனது பணி அமைந்தது!!!
சிறு துளியாக இருந்த அவளின் நினைவு பேரு வெள்ளமாக மாறியது !!!
என்னில் ஏற்பட்ட சிறிய மாற்றங்கள் அனைவரும் அறிந்தனர்!!!
மொழியின் வலிமையை நன் முழுதாக அறிந்தேன்!!!
அவளின் மொழியில் அவளிடம் பேச என்னால் முடியவில்லை!!
அண்டை நாட்டவர் மொழி அண்மையை அளித்தது!!!

ஆறு மாதங்களில் கல்லூரி காதலி கனவாய் மறைந்தாள்!!!
வட மாநில தேவதை வந்து அமர்ந்தாள் என் மனதில்!!!
நீண்ட நாட்களுக்கு பிறகு நானும் formalsil பணிக்கு வந்தேன்!!!

இதுவரை வேலை தேர்வுக்கு மட்டும் போர்மல்சில் போன நான்
பணிக்கு போர்மல்சில் சென்ற போது நண்பர்கள் அதிசியமாய் பார்த்தனர்!!!

வழக்கம் போல் இம்முறையும் எனது அதிர்ஷ்டம் தொடர்ந்தது!!!
இரண்டு வாரங்களுக்கு பிறகு தான் தெரிந்தது அவள் எனது அணியை விட்டு செல்கிறாள் என்றும் !!!
அதனால் தான் இந்த மாற்றம் எனது பணியில் என்றும் !!!

அன்று இரவு எனது பழைய மருத்துவர்கள் நெப்போலியன்-உம் மேக்டோவேல்-உம் எனக்கு வைத்தியம் பார்த்தனர்!!!

ஒவ்வொரு காலத்திலும் மாற்றம் வரும்!!!
மீண்டும் எனக்குள் ஒரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கையோடு மீண்டும் தொடங்கினேன் எனது ஸ்க்ரிப்டிங் பணியை!!!!

5 comments:

  1. Thala, what is this?!! who is that lucky girl?

    ReplyDelete
  2. that lucky girl is not here right now

    ReplyDelete
  3. ATC - routine - ல்
    romantic பிரேக் பாயிண்ட்-ஆ
    வாழ்த்துக்கள் மச்சி

    ReplyDelete
  4. break point pass-agi poitthathu machii

    ReplyDelete
  5. very nice.....language is simple and straight fwd.... good luck.

    ReplyDelete